Saturday, May 7, 2011

எச்சரிக்கை

உன் மேல்
நான் கொள்ளும் கோபம்

காரணம்

உன் செயல்
என்னை கொள்கிறதே

இதழ்கள் தனித்து
சிரிப்பதில்லை

இதயம் தன்
கண்ணை
வெறுப்பதில்லை

அது போல்
நானும்
என் உரிமையை
விட்டுகொடுப்பதில்லை

யாராருடனோ பழுகுகிறாய்
எங்கெங்கோ செல்கிறாய்

சரியில்லாத ஒன்றை
தவறில்லையே என்கிறாய்

வேண்டாமடி பெண்ணே

மை தீர்ந்த பேனாவில்
எழுதும் கவிதையாய்
என் நெஞ்சுக்குள்
உன் நினைவுகள்
முழுமையாக்கபடாமலேயே
முடிந்து போகலாம் !

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

அந்த தருணம்

பேசிவிட்டு
நாம் பிரியும்
கடைசி நிமிடத்திலும்
உன்னை
திரும்பி பார்த்துவிட்டே
செல்கிறேன்
இந்த பொழுது
நகராமல் அப்படியே
உறைந்து போக கூடாதா !

வருடுவதேன்

கண்கள் உறங்கும் நேரத்தில்
இதயம் இமைகளை
கவிதையை கொண்டு
வருடுவதேன் !

புது விதம்

உன்னாலே எந்தன்
நெஞ்சில்
பனிமழை
இந்த பெண்ணாலே
இன்று
என் மாற்றங்கள்
புது விதம் !

முத்தத்தின் வழியே

முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !

முத்தத்தின் வழியே

முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !

என் உலகம்

என் மேல்
அன்பின் அளவு
யாதென
அவள் கேட்டாள்
வானத்தை கை நீட்டி
அளந்து கொள்
என்றேன்

வானத்தில் மின்னல்கள்
சிரிப்பது போல்
உன் மேல் கோபத்தை
நான் கொஞ்சம்
தெளிக்கின்றேன்

நீ மௌனத்தால்
தண்டனை கொடுக்கையிலே
மறுகணம் கொஞ்சி
சிரிக்கின்றேன்

உனை போல
அழுகின்ற
மழை இல்லை

உனை போல
படர்கின்ற
நிழல் இல்லை

உலகில்
நீயும் என் தாயும்
போல
வேறு உறவில்லை !

சிறை

உனை சேர
காத்திருக்கும்
சில ஆண்டுகள்
உன்னை காதலித்த
குற்றத்திற்கு
நீ தரும்
சிறை தண்டனையா !

நினைப்பில் நீ

நீ
தோழியாக
இருந்த போது
நாளுக்கு ஒரு முறை
நினைத்தேன்
காதலியாக ஆன போது
உன் நினைப்பில் தான்
நாட்களை கடத்துகிறேன்
மாற்றங்கள்
உறவில் மட்டுமல்ல
உணர்விலும் கூட தான் !

மறக்கின்றேன்

உன் பிரிவின்
வேதனை
என் எண்ணங்களை
வெட்டி வீழ்த்துவதால்
கவிதை எழுதவும்
மறக்கின்றேன் !

ஞாயம் தானே

தூக்கத்தை
சிறை பிடித்து
விழியில்
அடைத்து பார்க்கிறேன்
ஏமாற்றி
தப்பி செல்கிறது தூக்கம்
நெஞ்சில் உன்
நினைவு இருக்கையில்
இது ஞாயம் தானே !

தூக்கமின்றி

பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !

தூக்கமின்றி

பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !