என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Monday, August 1, 2011
காதல் ! காதல் !
எங்கேயும் காதல்
காதலில் சிறு மோதல்
நினைவினில் சிறு சாதல்
சாதலில் வாழ்தல்
இது தான் காதல்!
பேசுவோம்
உயிர்கள் எல்லாம்
புரிந்த மொழியே
இதயம் மட்டும் பேசும் மொழியே
விழிகள் விதைத்து
விருட்சமாகும்
அன்பு என்ற
காதல் மொழியே
நாமும் பேசுவோம் கொஞ்சம் !
உனக்கு மட்டும்
நீ மட்டும் பேசும்
கைப்பேசி ஆகவா
நீ மட்டும் படிக்கும்
குறுஞ்செய்தி ஆகவா
நீ மட்டும் பார்க்கும்
கண்ணாடி ஆகவா
நீ மட்டும் வாசிக்கும்
புத்தகம் ஆகவா
நீ மட்டும் கேட்கும்
பாடல் ஆகவா
நீ மட்டும் ரசிக்கும்
இயற்கை ஆகவா
நீ மட்டும் வசிக்கும்
தேசமாகவா
உன்னை மட்டும் நனைக்கும்
மழைத்துளி ஆகவா
உனக்காகவே வாழும்
உயிரும் ஆகவா !?
கொஞ்சம் காதல்
உன் அன்னநடையில்
அன்னங்கள் தோற்று போகும்
சின்ன இடையில்
மின்னல்கள் மிரட்டி போகும்
நீ திரும்பி பார்க்க
உன் விழியும் என் தேசமாகும்
உறக்கம் தவிர்த்தே
உளறி தொலைத்தேன்
உனக்குள் விழுந்தே
உலகை மறந்தேன் !
விழியீர்ப்பு
மேலே இருந்து
கீழே விழுந்தது ஆப்பிள்
நியூவ்டன் அறிந்தது
புவியீர்ப்பு சக்தி
உன்னை நோக்கி
என் இதயம் பறக்கையில்
நானும் அறிந்தேன்
உன் விழியீர்ப்பு சக்தி !
யாரோ அவள்
கவிதை கரையோரம்
காத்திருந்தாள் பெண்ணொருத்தி
அவளை கண்டதில்லை
எனவே
நிலவை காண்கிறேன்
அவள் முகத்தை முன்னிருத்தி !
உனக்கு பதில்
நிலா முகம்
காணவே
உலா வரும் தென்றலாய்
உனக்கு பதில் நான்
உனக்காக தேய்கிறேன் !
கிளிஞ்சல்கள்
உனக்கு பரிசாய் தரவே
சேகரிக்கப்பட்ட கிளிஞ்சல்களை
கரை ஒதுக்கியதோ அலைகள் !
பூவாய் அவள்
பெண்களுக்கு மட்டும்
பூக்கள் சொந்தமென
யார் சொன்னது
இதோ பாருங்கள்
எனக்கும் ஒரு
பூ கிடைத்திருக்கிறது பெண்ணாக !
உயிர் தோழி
உயிர் விட்ட பூக்களெல்லாம்
உன் கூந்தலை சேருமே
உனை சேர வேண்டும் என்றால்
என் உயிரும் வேண்டுமோ
மடிந்தாலும்
விடிந்ததும்
சூரியன் உதிக்கும்
விடிந்தவுடன்
எழுந்ததும்
நெஞ்சம் உனை நினைக்கும்
வேர்க்காத தேகத்தினில்
குப்பைகள் மிஞ்சுமே
உனை பார்க்காத விழிகளுக்கு
காட்சியெல்லாம் பஞ்சமே
என் முகவரி சொல்லியே
உன் முகவரி கேட்கிறேன்
வழிந்திடும் உன் கண்ணீரில்
முழுமனதினை பார்க்கிறேன் !
விரும்புகிறேன்
நீ நகைக்காத
நேரமெல்லாம்
நரகமாய் தான் தெரிகிறது
நீ
புன்னகைக்க மறந்து விட்டால்
பூக்களில் தேன் குறைகிறது
தூரங்களை வெறுக்கிறேன்
நம்மை பிரிப்பதால்
இணையத்தை விரும்பினேன்
நம்மை இணைப்பதால் !
உன் நினைவுகள்
உன்னை
விட மாட்டேன் இனி
என தீவிரவாதமாய்
மிரட்டுகிறது
உன் நினைவுகள் !
வரம்
உன்னை
காண்கையில்
வரமொன்றை
கேட்கிறேன்
விழிப்பூக்களில்
நிறமாய் மாறவே !
மேகம் போல்
மேகம் தீண்டும் காற்றே
மெதுவாய் உரசு என் மேல்
நீ தீண்டிய பின்பு மேகம்
மழையாய் அழுவது ஏனோ
பெண்மை போலே நீயும்
பிறவி கொண்டதால் தானோ !
மின்னல் வந்து
மின்னல் வந்து
என்னை கொள்ளுமா
இதயம் வரை
பாய்ந்து செல்லுமா
பெண்மை என்னை
புரிந்து கொள்ளுமா
அவள் கண்மை வழியே
என் காதல் துள்ளுமா
அவள் இடையின் அளவு
என் கரங்கள் சொல்லுமா
அவள் இதழில் மோதி
என்னிதழ்கள் வெல்லுமா
உன்னில் காதல் உண்டா
அதை முதலில் சொல்லம்மா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)