Tuesday, June 14, 2011

செல்லக்கோபங்கள்

விடுமுறை நாட்களில்
அடம் பிடிக்கும்
ஒன்பது மணி
தூக்கம் போல்
என்னை
மன்னிக்க மறுக்கின்றன
உன்
செல்லக் கோபங்கள்
--
8148715743

Sunday, May 8, 2011

அன்பின் தினம்

நம் ஆரம்பம்
அவளின் கருவறை
அவளே அன்பின்
வகுப்பறை
கருவில் முதலில்
பிறப்பது
இதயம் தானாம்
அதில் தாயை சுமக்கனும்
என்றும் நாமும்
அம்மா என்பவள்
அன்பு மட்டும் நிறைந்திருக்கும்
சிறு உலகம்
எனவே
அன்னையர் தினம் என்பதை
அன்பின் தினமாக்குவோம் !

அம்மா அம்மா


நான் பார்த்த முதல் நிலா
அம்மா
நான் படித்த முதல் புத்தகம்
அம்மா
நான் ரசித்த முதல் கவிதை
அம்மா
எனக்கு முதலில் சோறு இட்டவள்
அம்மா
என்னை முதலில் சிரிக்க வைத்தவள்
அம்மா
என்னை முதலில் அழ வைத்தவள்
அம்மா
எனக்கு முதல் முத்தம் கொடுத்தது
அம்மா
நான் முதல் முத்தம் கொடுத்தது
அம்மா
என் முதல் பாடகி
அம்மா
என் முதல் அழகி
அம்மா
மொத்தத்தில்
என்னை சுமந்த
முதல் உலகம்
அம்மா அம்மா அம்மா

அம்மா


உன் வாழ்க்கையால்
நிரப்பினாய் என்னை
சாதாரண வார்த்தைகளால்
நிரப்ப முடியாது
உன்னை
நீயே
என் அன்னை !

Saturday, May 7, 2011

வரம் வேண்டி

விடியும் பொழுதினில்
அடியே உன்
அழகினை
கனவாய் சுமக்கவே
வரம் வேண்டுகிறேன் !

வரம் வேண்டி

விடியும் பொழுதினில்
அடியே உன்
அழகினை
கனவாய் சுமக்கவே
வரம் வேண்டுகிறேன் !

ஏனோ

நீ குளிர்கின்ற தீயடி
எரிகின்ற நீரடி
உன்னில் விழுந்தவன் நானடி
நீ உணராதது ஏனடி!

கவிஞன் இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது

புத்தகம் படித்த
அனுபவம் இல்லை
என் புத்தியில் ஏதும்
அமிர்தமும் இல்லை
கவி கட்டிய நூலை
யார் கொடுக்கவும்
இல்லை
விழியில்
காட்டியவள் நீ
விரைந்து
தீட்டியவன் நான்
பின்பு நான்
எப்படி கவிஞனாவேன்

கவிஞன் இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது

புத்தகம் படித்த
அனுபவம் இல்லை
என் புத்தியில் ஏதும்
அமிர்தமும் இல்லை
கவி கட்டிய நூலை
யார் கொடுக்கவும்
இல்லை
விழியில்
காட்டியவள் நீ
விரைந்து
தீட்டியவன் நான்
பின்பு நான்
எப்படி கவிஞனாவேன்

நான்

நான் விடை தேடும்
வினாத்தாள்

சில நேரங்களில்
எனக்கு நானே
பதிலும் ஆகிறேன்

நீ கேள்வி கேட்கும்
தருணங்களில்
என் இதயம் ஆகிறது
வெற்று தாளாய் !

எச்சரிக்கை

உன் மேல்
நான் கொள்ளும் கோபம்

காரணம்

உன் செயல்
என்னை கொள்கிறதே

இதழ்கள் தனித்து
சிரிப்பதில்லை

இதயம் தன்
கண்ணை
வெறுப்பதில்லை

அது போல்
நானும்
என் உரிமையை
விட்டுகொடுப்பதில்லை

யாராருடனோ பழுகுகிறாய்
எங்கெங்கோ செல்கிறாய்

சரியில்லாத ஒன்றை
தவறில்லையே என்கிறாய்

வேண்டாமடி பெண்ணே

மை தீர்ந்த பேனாவில்
எழுதும் கவிதையாய்
என் நெஞ்சுக்குள்
உன் நினைவுகள்
முழுமையாக்கபடாமலேயே
முடிந்து போகலாம் !

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

அந்த தருணம்

பேசிவிட்டு
நாம் பிரியும்
கடைசி நிமிடத்திலும்
உன்னை
திரும்பி பார்த்துவிட்டே
செல்கிறேன்
இந்த பொழுது
நகராமல் அப்படியே
உறைந்து போக கூடாதா !

வருடுவதேன்

கண்கள் உறங்கும் நேரத்தில்
இதயம் இமைகளை
கவிதையை கொண்டு
வருடுவதேன் !