Tuesday, August 2, 2011

ஏதோ ஒன்று

நேற்று பார்த்த உன்னை
நேரில் பார்க்க முடியவில்லை

காற்று போல வந்தாய்
வார்த்தை மட்டும் தந்தாய்

இன்னுமும் உன் வார்த்தைகள்
காற்றிலே அலையோடிகொண்டிருக்கிறது

அதிகாலை ஆரம்பித்து
நள்ளிரவு வரையிலும்
நினைவு நிலா மட்டுமே
என் வானில் காய்கிறது

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !

Monday, August 1, 2011

சிட்டு குருவி

வாகனத்தின் கண்ணாடியில்
வன்முறை காட்டும்
சிட்டு குருவியின்
அறியாமையும் ஒரு அழகு தான் !

தனிமை

நான் விரும்புவதில்லை
இருந்தாலும்
என்னோடு இருக்கிறாய் நீ
"தனிமை"

நீ என்

நீ என்
தகவல் அறியும் சட்டம்

அறிந்தேன் உன்னால்
மொத்தம்

இருப்பதென்றால்
மிச்சம்

அதை தருவதில் என்ன
அச்சம் !

நினைவுகளில்

பேருந்து நிறுத்தம்
கடைபலகையில்
உன் பெயரை
பார்க்கையில்
புறப்பட தயாராகி விடுகிறது
உன்னை பற்றிய நினைவுகள் !

பணம்

சீட்டுகட்டுகளில் இருந்திருந்தாலாவது
நோட்டுகட்டுகளின் வாசம் முகர்ந்திருப்பேன்
மனிதகூட்டுக்குள் பிறந்துவிட்டேன்
ரூபாய் நோட்டுகள் இல்லையே
ஏழ்மை பூட்டுதனை தகர்த்தெறிய !

ரணம்

இரவில் நிழல்
தேவை இல்லையென
இலையுதிர்த்ததோ மரம்

என் இதயம் உதிர்ந்தது
எவ்வாறு என
அறியமுடியாத ரணம் !

காதல் கொல்லும்

வானமும் பூமியும்
தொல்லையடி
வானவில் கூட
வெள்ளையடி
சொல்ல வார்த்தைகள்
என்னிடம் இல்லையடி
உன் காதல்
என்னை கொல்லுதடி !!!!!!!

நியாயமா !

நினைவே நீ எனும்போது
மறக்க முடியுமா

கனவே நீ என்பதால்
காண மறுக்க முடியுமா

நீ பேசாது போனால்
நான் ஊமையாகிறேன்

நீ பார்க்காமல் போனால்
விழியற்று போகிறேன்

உன் பாதசுவடுகள் எனக்கு
புகைப்படம்

உன் அன்பு ஒன்றே எனக்கு
நிழற்குடை

என் இதயம் வரை தாக்கும்
நீ பெண்ணாகிய மின்னல்

என்னை வேரோடு சாய்க்கும்
நீ வயல்வெளி தென்றல்

இப்படியே வர்ணித்து
வாழ்க்கை போகுமா

மேகம் இல்லா வானம் தான்
மழையை தூருமா

நான் வானம் என்றால்
என்னுடைய மேகம் நீயம்மா

என்னோடு சேராமல் போவது
உனக்கே நியாயமா !

பெண்ணே

உயிர் உடலில் இல்லை
அது உன்னிடமே
என் உலகம் எங்கேயும் இல்லை
அது அந்த பெண்ணிடமே
ஏ பெண்ணினமே
ஆண்கள் சிக்குவதேல்லாம்
உங்கள் கண்ணிடமே !

கீதம்

அவள் அழைப்புகளுக்கு
என்றும் தடைவிதிக்காத
கைபேசியே
நான் அழைக்கையில் மட்டும்
என்னை ஏமாற்றிவிடுவதேன்

அவளுக்காய் ஏமாறுவதும்
ஒருத்துளி தேன்

அவள் நாணம் கொண்டு
நகம் கடித்தால்
வானம் வடக்கே சிவப்பதேன்

உதட்டு வழி அழைக்கும்
அவள் பெயரும்
என் உள்நெஞ்சின்
கீதம் தான் !

காதல் ! காதல் !

எங்கேயும் காதல்
காதலில் சிறு மோதல்
நினைவினில் சிறு சாதல்
சாதலில் வாழ்தல்
இது தான் காதல்!

பேசுவோம்

உயிர்கள் எல்லாம்
புரிந்த மொழியே
இதயம் மட்டும் பேசும் மொழியே
விழிகள் விதைத்து
விருட்சமாகும்
அன்பு என்ற
காதல் மொழியே
நாமும் பேசுவோம் கொஞ்சம் !

உனக்கு மட்டும்

நீ மட்டும் பேசும்
கைப்பேசி ஆகவா

நீ மட்டும் படிக்கும்
குறுஞ்செய்தி ஆகவா

நீ மட்டும் பார்க்கும்
கண்ணாடி ஆகவா

நீ மட்டும் வாசிக்கும்
புத்தகம் ஆகவா

நீ மட்டும் கேட்கும்
பாடல் ஆகவா

நீ மட்டும் ரசிக்கும்
இயற்கை ஆகவா

நீ மட்டும் வசிக்கும்
தேசமாகவா

உன்னை மட்டும் நனைக்கும்
மழைத்துளி ஆகவா

உனக்காகவே வாழும்
உயிரும் ஆகவா !?

கொஞ்சம் காதல்

உன் அன்னநடையில்
அன்னங்கள் தோற்று போகும்

சின்ன இடையில்
மின்னல்கள் மிரட்டி போகும்

நீ திரும்பி பார்க்க
உன் விழியும் என் தேசமாகும்

உறக்கம் தவிர்த்தே
உளறி தொலைத்தேன்

உனக்குள் விழுந்தே
உலகை மறந்தேன் !

விழியீர்ப்பு

மேலே இருந்து
கீழே விழுந்தது ஆப்பிள்
நியூவ்டன் அறிந்தது
புவியீர்ப்பு சக்தி

உன்னை நோக்கி
என் இதயம் பறக்கையில்
நானும் அறிந்தேன்
உன் விழியீர்ப்பு சக்தி !

யாரோ அவள்

கவிதை கரையோரம்
காத்திருந்தாள் பெண்ணொருத்தி
அவளை கண்டதில்லை
எனவே
நிலவை காண்கிறேன்
அவள் முகத்தை முன்னிருத்தி !

உனக்கு பதில்

நிலா முகம்
காணவே
உலா வரும் தென்றலாய்
உனக்கு பதில் நான்
உனக்காக தேய்கிறேன் !

கிளிஞ்சல்கள்

உனக்கு பரிசாய் தரவே
சேகரிக்கப்பட்ட கிளிஞ்சல்களை
கரை ஒதுக்கியதோ அலைகள் !

பூவாய் அவள்

பெண்களுக்கு மட்டும்
பூக்கள் சொந்தமென
யார் சொன்னது
இதோ பாருங்கள்
எனக்கும் ஒரு
பூ கிடைத்திருக்கிறது பெண்ணாக !

உயிர் தோழி

உயிர் விட்ட பூக்களெல்லாம்
உன் கூந்தலை சேருமே
உனை சேர வேண்டும் என்றால்
என் உயிரும் வேண்டுமோ

மடிந்தாலும்
விடிந்ததும்
சூரியன் உதிக்கும்

விடிந்தவுடன்
எழுந்ததும்
நெஞ்சம் உனை நினைக்கும்

வேர்க்காத தேகத்தினில்
குப்பைகள் மிஞ்சுமே

உனை பார்க்காத விழிகளுக்கு
காட்சியெல்லாம் பஞ்சமே

என் முகவரி சொல்லியே
உன் முகவரி கேட்கிறேன்

வழிந்திடும் உன் கண்ணீரில்
முழுமனதினை பார்க்கிறேன் !

விரும்புகிறேன்

நீ நகைக்காத
நேரமெல்லாம்
நரகமாய் தான் தெரிகிறது

நீ
புன்னகைக்க மறந்து விட்டால்
பூக்களில் தேன் குறைகிறது

தூரங்களை வெறுக்கிறேன்
நம்மை பிரிப்பதால்

இணையத்தை விரும்பினேன்
நம்மை இணைப்பதால் !

உன் நினைவுகள்

உன்னை
விட மாட்டேன் இனி
என தீவிரவாதமாய்
மிரட்டுகிறது
உன் நினைவுகள் !

வரம்

உன்னை
காண்கையில்
வரமொன்றை
கேட்கிறேன்
விழிப்பூக்களில்
நிறமாய் மாறவே !

மேகம் போல்

மேகம் தீண்டும் காற்றே
மெதுவாய் உரசு என் மேல்

நீ தீண்டிய பின்பு மேகம்
மழையாய் அழுவது ஏனோ

பெண்மை போலே நீயும்
பிறவி கொண்டதால் தானோ !

மின்னல் வந்து

மின்னல் வந்து
என்னை கொள்ளுமா

இதயம் வரை
பாய்ந்து செல்லுமா

பெண்மை என்னை
புரிந்து கொள்ளுமா

அவள் கண்மை வழியே
என் காதல் துள்ளுமா

அவள் இடையின் அளவு
என் கரங்கள் சொல்லுமா

அவள் இதழில் மோதி
என்னிதழ்கள் வெல்லுமா

உன்னில் காதல் உண்டா
அதை முதலில் சொல்லம்மா