Sunday, April 24, 2011

கிறுக்கல்

உன் மேல்
கிறக்கங்கள்
அதனால்
கவிதை கிறுக்கல்கள்

தவறில்லை

கவிதை எழுதிடும்
கிறுக்கில்
உன் பெயரை
எழுதுகிறேன்
தவறென்று சொல்லவில்லை
இலக்கணம்

ஆசை

காகிதத்தின் மேல்
மழைச்சாரல்
மேகம் கூட
ஆசை கொள்ளுதே
உனக்காக கவிதை
எழுத !

தலை எழுத்து

இது என் நாடு
கை நீட்டியவனேல்லாம்
கடவுள்
கால் நீட்டியவனெல்லாம்
காந்தி
பணம் நீட்டியவனேல்லாம்
பாசக்காரன்
நடிகனெல்லாம் நல்லவன்
உன் பணத்தை பிடுங்கி
உனக்கே இலவசம் என்று
கொடுத்தால்
அவனே உயர்ந்த உள்ளம
உள்ளவன்
மூளை கழட்டி
வைத்து விட்டு
வெற்று தலையாய்
அலைபவர்களுக்கு
இதுதானே வேதம்
இது என் நாடு
மாற்ற முடியாது
தலை எழுத்தை
இன்னும் ஒரு
சுனாமி வரும் வரை

தூக்கம் எங்கே

உன் நாணம்
பிறந்த நாள் முதல்
என் இதயம்
தொலைந்தது
என் விழிகளை
இதயத்தில் ஒளித்து
வைத்திருந்தேன்
இதயம் தொலைத்ததால்
உறக்கத்தையும் இழந்தேன்

எனக்கு மட்டும்

எனக்கு மட்டும்
வேண்டும்
உன் மழை சாரல்
மழை நேர குடையாய்
என்னில் உன் நினைவுகள்
கைக்குள் அடங்கும்
நீ பேசும்
ஆயிரம் வார்த்தைகள்
எதாவது ஒன்றில்
என் நெஞ்சம்
மெருகூட்டபடுகிறது
அதிகாலை நேரம்
கேட்கும் பாடல்
இதழ்களுக்கு அடிமை
அது போலவே
அடிநெஞ்சில்
நுழைந்த உனக்கு
என் ஆயுளும் அடிமை
ஒற்றை ரூபாயில்
விழும்
பூவா தலையாய்
அடிக்கடி நெஞ்சம்
ஆடுது ஆட்டம்
கவிதை எழுத
நூற்றாண்டுகள் போதாது
நெஞ்சை நெருக்குது
கற்பனை கூட்டம்

Friday, April 22, 2011

அழைப்புகள்

வெயிலுக்கு
எதிர்பார்க்கும்
மழையாய்
நான்
எதிர்ப்பார்க்கும்
அவளின்
(ஸ்)கைப்பேசி
அழைப்புகள் !

Thursday, April 21, 2011

ஆரம்பிக்கப்படாத கவிதை

மணிக்கட்டில்
ரத்தம் சொட்ட
மணிக்கணக்கில்
எழுதினேன்
உனக்காக கவிதையை
முதல் புள்ளியோடு
நிற்கிறது
ஆரம்பிக்கப்படாத
அந்ந கவிதை !

பொய்யும் அழகு

உனை
பார்க்கும் முன்பு
வானத்தின் ஒரு துளி
நிலா என்றிருந்தேன்
காதல் வந்த பின்பு
வானம் நிலவின்
ஒரு புள்ளி
என்றுணர்ந்தேன்
இது உண்மையோ
பொய்யோ
உனக்காக சொல்லும் போது
பொய்யும் அழகு தானே !

சொல்லிவிடு

கண்ணின் கருவினில்
பிம்பமாய் விழுந்து
உள்மனதை தேடியே
ஊர் பயணம் செல்கிறாய்
இது வேதியல் மாற்றமா
காதலின் ஆட்டமா
வேதனை தோற்றமா
காதலை நீ சொன்னால்
என் இதயமும் மாறிடும்
பூக்களின் கூட்டமாய் !

சொல்லிவிடு

கண்ணின் கருவினில்
பிம்பமாய் விழுந்து
உள்மனதை தேடியே
ஊர் பயணம் செல்கிறாய்
இது வேதியல் மாற்றமா
காதலின் ஆட்டமா
வேதனை தோற்றமா
காதலை நீ சொன்னால்
என் இதயமும் மாறிடும்
பூக்களின் கூட்டமாய் !

லேட்டஸ்ட் கவிதை நீ

என்
எஸ்எம்எஸ் தோழி நீ !
அடி மொபைல் போன்
மோகினி !
பறக்குதே உன்
தாவணி !
ராத்திரி ராகம் நீ !
குளிர்ந்திடும் மேகம் நீ !
விடிந்திடும் வானம் நீ !
குழந்தையின் கோபம் நீ !
அதிகாலை வென்பணி
வானத்தின் வின்மணி !
பளிச்சிடும் மின்மினி !
அடியே
உன் காதலன் நான் இனி !

Monday, April 18, 2011

தென்றல் எது

வெற்று மனதாய்
இருந்தவன் நான்
என்னை
தொட்டு சென்ற
தென்றல் எது
வேற்று மனதை
தேடியே
நெஞ்சம்
வேறு கிரகம்
செல்லுதடி!

பிரிவு

பிரிவென்று சொல்லாதே
தூக்கமும்
கண்ணில் நில்லாதே

நீ பேசும்
வார்த்தை
நின்று போனால்
என் சுவாசமும்
செல்லும்
வனவாசம்

முதல்நாளோடு
உறவு
முறிந்து போயிருந்தால்
அந்த ஒரு
நாளோடு
முடிந்திருக்கும்
திருநாள்

நிமிடங்களை கடந்தோம்
நாட்களை கடந்தோம்
மாதங்களை கடந்தோம்
இவையாவையும்
கடந்தது
பிரிவூருக்கு செல்லத்தானோ

காரணம் தேடி

எதற்காக அழுவது
நெஞ்சுக்குள் ஈரமில்லை
கண்ணீரில்
கவலை இல்லை

இல்லை
உன்னை பிரிந்ததற்க்கா
உண்மை தெரிந்ததற்க்கா
என்னை மறந்ததற்க்கா

ஞாபகம்

எட்டு திசையிலும்
உன் முகம்
ஞாபகம்

தென்னங் கீற்றின்
ஒலியிலும்
உன் குரல்
ஞாபகம்

மாற்றிக்கொள்ள
நினைக்கிறேன்
மனதை

தேற்றிகொள்ளவும்
நினைக்கிறேன்

இருந்தும்
ஏற்றுகொல்லாத
நெஞ்சை
என்செய்வேன் பெண்ணே !

Friday, April 8, 2011

தொலைதூர காதல்

தொலைதூர
காதலெல்லாம்
தொலைவதில்லை
பெண்ணே
மறக்காமல்
சொல்லிவிடு
காதல் என்ற ஒன்ன !

உணர்ந்தேன்

எனக்காக நீ
அழும்போது தான்
உனக்காக என்
இதயம் இருப்பதை
உணர்ந்தேன் !
கத்தியின்றி
கொல்லும்
வித்தை கற்றவள்
நீதான்
உன் விழிகளில் நான்
கலந்திருப்பதை
உணர்ந்தே
அழுகிறாய்
கண்ணீரின் வழியே
என் உயிரும் கலந்து
வழியுதடி !

சொல்

எட்டி பறிக்க
நான் வந்தேன்
விட்டு பிரியுது
பூ ஒன்று
நெஞ்சோரம்
நினைவுகள்
கொஞ்சம்
ஒட்டியிருந்தால்
சொல்லிவிடு
உன காதல்
நான் தான்
என்று !

வானம் தேடுதே

வானம் தேடும்
நிலா நீ
நினைவுகள்
இரவுகளாய்
நீண்டுக்கொண்டிருக்கையில்
நீ வராததது ஏனோ !

உன்னை தவிர

காதல் பேய்
பிடித்து

இதய நோய்
பிடித்து

இயன்றவரை
போராடியும்

மருத்துவம் கிடைக்கவில்லை

உன்னை தவிர யாரிடமும் !

நிலா போல்

நாளெல்லாம் தேயும்
நிலாப்போல்
நானும் தேய்கிறேன்
உன் நினைவுகளால் !

பேஸ்புக் தோழி

காலை விடிந்ததும்
கண்விழித்து
பார்த்ததும்
உன் முகநூல் பக்கத்தை தான்
முதலில் அலசுகிறேன்
எங்கே நீ வந்து சென்றிருப்பாயோ !

நட்பில் ஒரு வகை

வாடும் பூவின் மேல்
வண்ணத்து பூச்சிக்கு
நட்பில்லை

தேயும் நிலவின் மேல்
கவிஞனுக்கும்
நட்பில்லை

நீ சிந்தும்
கண்ணீரின் மேல் மட்டும்
என் இதயத்திற்கு எப்படி நட்பானது !

தாக்கம்

உன் கண்ணீர் சுனாமியின்
தாக்கத்திலிருந்து
இன்னும் மீளாத
ஜப்பான் அல்லவா நான் !

தூங்காத இரவுகள்

இரவுகள் என்னோடு
போரிடும்

விழிகளும் தூங்கக் கூறிடும்

உன் நினைவுகள்
நெஞ்சில் வேரிடும்

இதை நானும்
சொல்வேன் யாரிடம் ?

Monday, April 4, 2011

முத்தம்

முத்த வாக்குகள்
மொத்தம் எத்தனை !
இது தேர்தல் நேரமல்லவா
ஏனோ சிந்தனை !

இது காதல் வேளை
அல்லவா
ஏன் உனக்கு
வெட்கம் !

எண்ணி சொல்லிவிடு
வெற்றி யார் பக்கம் !
--
8148715743